எலான்மஸ்க் முன்னாள் மனைவிக்கு நடிகருடன் திருமணம்!!

 
எலான் மஸ்க் முன்னாள் மனைவி

எலான் மஸ்க்  2022 அக்டோபரில் ட்விட்டரை விலை கொடுத்து வாங்கியது முதல் அவரது ஒவ்வொரு அடியும் பரபரப்பு செய்திகளாகி வருகின்றன.  டுவிட்டரை  வாங்கிய பிறகு ஆட்குறைப்பு, தலைமை செயல் அதிகாரி மாற்றம், லோகோ மாற்றம், ப்ளூடிக் சேவை, மாத சந்தா என பல அதிரடி அறிவிப்புக்களை வெளியிட்டு உடனடியாக செயல்படுத்தினார். இதனால் பல பயனர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.


 

 

தற்போது டுவிட்டர் தனது பெயரையும் லோகோவான நீலக்குருவியை மாற்றி  டிவிட்டர் X    எக்ஸ் சின்னமாக மாறியுள்ளது. எலான் மஸ்க்கின்  முன்னாள் மனைவி தலுலா ரிலேவுக்கு பிரபல நடிகருடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. எலான் மஸ்க், தலுலா ரிலே தம்பதி 2016 ல் விவாகரத்து செய்து கொண்டனர்.  தலுலா ரிலே தன்னைவிட 4 வயது இளையவரான 'கேம் ஆப் திரோன்ஸ்' புகழ் தாமஸ் பிராடி சாங்ஸ்டரை மணக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  சமூக வலைதளங்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.  

எலான் மஸ்க்

கடந்த  2 வருடங்களாக தலுலா ரிலே, தாமஸ் பிராடியுடன் டேட்டிங் செய்து வருவதும், ரிலே தனக்கு நிச்சயதார்த்தம் நடந்ததையும்  டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். தனது முன்னாள் மனைவி மற்றொரு திருமணத்திற்கு தயாராகி வருவது குறித்து எலான் மஸ்க்  சிவப்பு இதயம் கொண்ட எமோஜியுடன் வாழ்த்து தெரிவித்து உள்ளார். மறுபுறம், தாமஸ் பிராடி சாங்ஸ்டர் தனது இன்ஸ்டாகிராம் மூலம் அவர்களது நிச்சயதார்த்தம் குறித்து தெளிவுப்படுத்தி உள்ளார். ஆனால் அவர்களின் திருமணம் எப்போது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!