நெகிழ்ச்சி வீடியோ... 97 வயதில் விமான இறக்கையில் பயணித்து கின்னஸ் சாதனை படைத்த பிரிட்டன் பாட்டி!
Aug 6, 2026, 17:00 IST
பிரிட்டனைச் சேர்ந்த 97 வயதான பெட்டி ப்ரோமேஜ் என்ற மூதாட்டி ஒருவர், பறக்கும் விமானத்தின் இறக்கையின் மீது நின்றபடி ஆபத்தான சாகசப் பயணம் மேற்கொண்டு கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
97 வயதான நிலையிலும், பயமின்றிப் பறக்கும் விமானத்தின் மேல் நின்றபடி பயணித்துத் தனது அசாத்திய தன்னம்பிக்கையை அவர் உலகிற்கு வெளிப்படுத்தியுள்ளார். மெய்சிலிர்க்க வைக்கும் இந்தச் சாகசப் பயணக் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி உலகளவில் அதிக கவனத்தைப் பெற்று வருகின்றன.

முதிர்ந்த வயதிலும் இத்தகைய கடினமான மற்றும் ஆபத்தான சாதனையை நிகழ்த்திக் காட்டிய பெட்டி ப்ரோமேஜின் துணிச்சலைப் பாராட்டி சர்வதேச அளவில் பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
