நெகிழ்ச்சி வீடியோ... மெட்ரோ ரயிலில் வாஞ்சையாக முதல்வர் விஜய்யின் கன்னத்தைத் தடவி, கையில் முத்தமிட்டு அன்பை வெளிப்படுத்திய பெண்!
சென்னையில் மெட்ரோ ரயில் ஆய்வின் போது மக்களுடன் பயணம் செய்த தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு, பெண் பயணி ஒருவர் முத்தமிட்டுத் தனது அன்பை வெளிப்படுத்திய காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டப் பணிகளை நேரில் ஆய்வு செய்த முதலமைச்சர் விஜய், ஓமந்தூரார் தோட்டம் முதல் நந்தனம் வரை சாதாரணப் பயணிகளுடன் ரயிலில் அமர்ந்து பயணித்தார். அப்போது முதலமைச்சர் விஜயை மிக அருகில் கண்ட பெண் பயணி ஒருவர் பேரானந்தம் அடைந்தார். தனது அளவற்ற மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக, எதிர்பாராத விதமாக முதலமைச்சரின் கையைப் பிடித்து முத்தமிட்டுத் அவரது தோளில் சாய்ந்து தனது அன்பைப் பகிர்ந்துகொண்டார்.

மக்கள் முதல்வராக எளிமையோடு பழகிய இந்த நெகிழ்ச்சியான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. ஆடம்பரமின்றி சாதாரண மக்களுடன் இணைந்து மெட்ரோ ரயிலில் பயணித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்த முதலமைச்சர் விஜயின் இந்த எளிய நடவடிக்கைக்குப் பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
