தேர்தல் 2024 | காங்கிரஸ் வியூகம் என்னாவா இருக்கும்? மல்லிகார்ஜுன கார்கே களமிறங்குவாரா?

 
தேர்தல் 2024 | காங்கிரஸ் வியூகம் என்னாவா இருக்கும்? மல்லிகார்ஜுன கார்கே களமிறங்குவாரா? 

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இந்த முறை மக்களவைத் தேர்தலில் நேரடியாக போட்டியிடுவதை தவிர்க்க கூடும் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தற்போது மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார். கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் கர்நாடகாவின் குல்பர்கா தொகுதியில் அவர் தோல்வியைத் தழுவினார். அதைத் தொடர்ந்து மல்லிகார்ஜுன கார்கேவை கட்சி மேலிடம் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்தது. அவருக்கு இன்னும் 4 ஆண்டுகள் பதவிக்காலம் உள்ளது. தற்போது மாநிலங்களவை எதிர்க்கட்சித்தலைவராக மல்லிகார்ஜுன கார்கே தான் உள்ளார்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியில் வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் குல்பர்கா தொகுதியில் மீண்டும் கார்கேவை களமிறக்க அக்கட்சி பரிசீலித்தது.

தேர்தல் 2024 | காங்கிரஸ் வியூகம் என்னாவா இருக்கும்? மல்லிகார்ஜுன கார்கே களமிறங்குவாரா? 


ஏனெனில் இத்தொகுதியில் கார்கே 2019-க்கு முன்னதாக இரண்டு முறை வெற்றி பெற்றுள்ளார். இச்சூழலில் கார்கே, குல்பர்காவில் தனக்குப் பதிலாக தனது மருமகன் ராதாகிருஷ்ணன் தொட்டமானியை, குல்பர்காவில் களமிறக்க பரிசீலித்து வருவதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கார்கேவின் மகன் பிரியங்க் கார்கே கர்நாடக முதல்வர் சித்தராமையா அமைச்சரவையில் அமைச்சராக உள்ளார். அவரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிட தனக்கு விருப்பமில்லை என தெரிவித்துவிட்டார். இச்சூழலில் குல்பர்காவுடன் நின்றுவிடாமல் நாடு முழுமைக்கும் தேர்தல் பணியாற்றும் வகையில் கார்கே, வரும் தேர்தலில் நேரடியாகப் போட்டியிடுவதை தவிர்க்க முடிவு செய்துள்ளார்.

தேர்தல் 2024 | காங்கிரஸ் வியூகம் என்னாவா இருக்கும்? மல்லிகார்ஜுன கார்கே களமிறங்குவாரா? 

காங்கிரஸ் தலைவர்கள் நேரடி போட்டியை தவிர்த்ததாக கடந்த காலங்களில் பதிவுகள் இல்லை. முன்னாள் தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் கூட தலைவர் பதவியில் இருந்தபோது தேர்தலில் நேரடியாக போட்டியிட்டு வெற்றி பெற்றனர். அதேபோல் பாஜகவில் தற்போதைய தலைவர் ஜே.பி.நட்டா மட்டும் தான் நேரடி தேர்தலில் போட்டியிடவில்லை. அவர் குஜராத் மாநிலத்திலிருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். அக்கட்சியின் முன்னாள் தலைவர்களான ராஜ்நாத் சிங், அமித் ஷா ஆகியோர் கட்சியின் தலைவராக இருந்தபோது முறையே 2014, 2019 ஆகிய தேர்தல்களில் நேரடியாக போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.

From around the web