எய்ம்ஸ் ஒற்றை செங்கல் முடிவுக்கு வந்தது... மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணி தொடக்கம்!

 
எய்ம்ஸ்

மதுரை தோப்பூரில் கிடப்பில் போடப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் முதற்கட்ட கட்டுமானப் பணிகள் தொடங்கியுள்ளன. டெல்லியில் உள்ளதைப் போல அனைத்து மாநிலங்களிலும் AIIMS (All India Institute of Medical Sciences) அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. இதன்படி தமிழகத்தில் மதுரை மாவட்டம் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடம் தேர்வு செய்யப்பட்டது. 2018ல் 222 ஏக்கரில் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்ததை அடுத்து, 2019ல் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

நாட்டில் உள்ள மற்ற திட்டமிடப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு மத்திய அரசு தனது பட்ஜெட்டில் நேரடியாக நிதி ஒதுக்கீடு செய்தது. ஆனால் மதுரை மருத்துவமனையின் கட்டுமானத்திற்காக ஜப்பானின் ஜெய்கா நிறுவனத்திடம் இந்தியா கடன் வாங்க 2021 மார்ச்சில் ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த மருத்துவமனை கட்டுவதற்கு ரூ.1977 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 82 சதவீத தொகையான ரூ.1627 கோடி கடனாக ஜெய்கா வழங்கும் என்று கூறப்பட்டது.

ஆனால் நிறுவனம் இதுவரை கடன் வழங்கவில்லை. கொரோனா வைரஸ் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமானப் பணிகள் 5 ஆண்டுகளாக தொடங்கப்படவில்லை. மதுரையுடன் சேர்த்து அறிவிக்கப்பட்ட மற்ற எய்ம்ஸ் மருத்துவமனைகள் அனைத்தும் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளன. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

மறுபுறம், 17 ஆகஸ்ட் 2023 அன்று, மருத்துவமனை கட்டுவதற்கான டெண்டர் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த ஜனவரி மாதம், எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு, வசதிகள் குறித்து அறிவிக்கப்பட்டது. மேலும் கட்டுமான டெண்டர் இறுதி செய்யப்பட்டு மத்திய சுகாதார அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. எல் அண்ட் டி நிறுவனம் டெண்டர் எடுத்ததால் வாஸ்து பூஜை மற்றும் நிலம் சமன்படுத்தும் பணி சமீபத்தில் நடந்தது.

இந்நிலையில், மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான முதற்கட்ட பணிகள் தொடங்கியுள்ளன. ஏற்கனவே ரூ.10 கோடி மதிப்பீட்டில் 5 கி.மீ., 12 அடி உயர சுற்றுச்சுவர், 6 கி.மீ., ரோடு பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து 10 மாடிகளில் 870 படுக்கைகள் கொண்ட எய்ம்ஸ் மருத்துவமனையின் பணிகள் திடீரென தொடங்கியுள்ளதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அவசர அவசரமாக எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட்அ தொடங்கி இருப்பது நாடளுமன்ற தேர்தல் தான் காரணம் என்றும் எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம் தெரிவித்து வருகின்றன.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web