தேர்தல் திருவிழா... மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்!

 
வேட்புமனு இடைத்தேர்தல்

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், வேட்புமனு தாக்கல் செய்வதற்கான அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது.

மதுராந்தகம் தாராபுரம் இடைத்தேர்தல்

கடந்த 9-ம்தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் இன்றுடன் முடிவடைகிறது. இறுதி நாளான இன்று தவெக, அதிமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் தங்களது மனுக்களைத் தாக்கல் செய்ய உள்ளனர்.

மதுராந்தகம் தாராபுரம் இடைத்தேர்தல்

மதுராந்தகம் தொகுதியில் தவெக சார்பில் மரகதம் குமரவேலும், திமுக சார்பில் ஐ.பரந்தாமனும் நேற்று தங்களது வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர். பெறப்பட்ட வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடைபெறவுள்ளது. இதனையடுத்து, வரும் அக்டோபர் 6-ம்தேதி இந்த இரண்டு தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.