5 மாநில சட்டமன்றத் தேர்தல்... உடனடியாக அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிமுறைகள்!

 
தேர்தல் நடத்தை விதிமுறைகள் தேர்தல் நடத்தை விதிமுறைகள்


புதுடெல்லி: தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல் தேதிகளை இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் இன்று (மார்ச் 15, 2026) அறிவித்தார். இந்த அறிவிப்புடன் சேர்த்து, தற்போதுள்ள சட்டசபைகளின் பதவிக்காலம் மற்றும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்த முக்கிய விபரங்களையும் அவர் வெளியிட்டார்.

தேர்தல் ஆணையம்

 தேர்தல் நடத்தை விதிமுறைகள்   அமல்:
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட மார்ச் 15-ம் தேதி மாலை முதல், சம்பந்தப்பட்ட 5 மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. இதன்படி:   மக்கள் வாக்களிப்பதில் செல்வாக்கு செலுத்தும் வகையில் புதிய நலத்திட்டங்கள், நிதி ஒதுக்கீடு அல்லது அடிக்கல் நாட்டு விழாக்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.ஆளும் கட்சியினர் அரசு வாகனங்களையோ அல்லது அரசு அதிகாரிகளையோ தேர்தல் விளம்பரத்திற்காகப் பயன்படுத்தக் கூடாது.

பிரச்சாரச் செலவுகள்: வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் மேற்கொள்ளும் தேர்தல் பிரச்சாரச் செலவுகள் அனைத்தும் துல்லியமாகக் கணக்கிடப்பட்டு, தேர்தல் ஆணையத்தின் வரம்பிற்குள் இருக்க வேண்டும்.

தேர்தல் ஆணையம்

 தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பேசுகையில், "மாவட்டத் தேர்தல் அதிகாரிகள் (மாவட்ட ஆட்சியர்கள்) உரிய அனுமதி வழங்கிய பின்னரே பொதுக்கூட்டங்களை நடத்த வேண்டும். விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்" என எச்சரிக்கை விடுத்துள்ளார்.