சட்டமன்றத் தேர்தல்... தமிழகம் முழுவதும் 5,500 சிறப்பு பேருந்துகள் !

 
பேருந்து பேருந்து

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று வாக்களிக்க வசதியாக, மாநிலம் முழுவதும் 5,500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. வரும் ஏப்ரல் 21-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை 3 நாட்களுக்கு இந்தச் சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாகச் சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்குச் செல்பவர்களின் வசதிக்காகக் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

பேருந்து போக்குவரத்து ஊழியர்கள்

ஏப்ரல் 21 முதல் 23 வரை வழக்கமாக இயக்கப்படும் 2,092 பேருந்துகளுடன், கூடுதலாக 5,574 சிறப்பு பேருந்துகளை இயக்க விரைவுப் போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் தேர்தல் நேரத்தில் ஏற்படும் கூட்ட நெரிசலைத் தவிர்த்து, பொதுமக்கள் சிரமமின்றிப் பயணம் செய்ய முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கான முன்பதிவு வசதிகளும் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

பேருந்து சொகுசு

சென்னையின் முக்கியப் பேருந்து நிலையங்களான கோயம்பேடு மற்றும் கிளாம்பாக்கத்தில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு இந்தப் பேருந்துகள் புறப்பட உள்ளன. தேர்தலையொட்டிப் பொதுமக்கள் அதிகளவில் பயணம் மேற்கொள்வார்கள் என்பதால், போக்குவரத்துப் பணிகளைக் கண்காணிக்கத் தனி அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர். அரசு எடுத்துள்ள இந்த அதிரடி நடவடிக்கை வாக்காளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.