வாக்களிக்க ஊர் செல்பவர்களே உஷார்... ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகார் அளிக்க தொலைபேசி எண்கள் வெளியீடு!

 
பேருந்து யுபிஐ பேருந்து யுபிஐ

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், சென்னையில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குப் பயணம் செய்யத் தொடங்கியுள்ளனர். இதனைச் சாதகமாகப் பயன்படுத்தி தனியார் ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன. பொதுமக்கள் இத்தகைய கட்டணக் கொள்ளையில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும், கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பேருந்துகள் குறித்து உடனடியாகப் புகார் அளிக்கவும் போக்குவரத்துத் துறை அறிவுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு தேர்தல் தமிழகம்

அதிகப்படியான கட்டணம் வசூலிக்கும் நிறுவனங்கள் குறித்து பொதுமக்கள் 1800 425 6151 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்குத் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். இது தவிர, சென்னை மற்றும் மாநிலத்தின் முக்கிய நகரங்களில் உள்ள போக்குவரத்து ஆணையரக எண்களையும் அரசு வெளியிட்டுள்ளது. தேர்தலை முன்னிட்டு வெளியூர் செல்லும் வாக்காளர்கள் எவ்வித இடையூறுமின்றி பயணம் செய்வதை உறுதி செய்ய மாநிலம் முழுவதும் போக்குவரத்துத் துறையினர் தீவிரக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தேர்தல்

நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விடக் கூடுதலாக ஒரு ரூபாய் வசூலித்தாலும் சம்பந்தப்பட்ட பேருந்து உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பல இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் விதிகளை மீறிய பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதோடு, அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களது பயணச் சீட்டுகளை ஆதாரமாக வைத்துப் புகார் அளிக்கலாம் என்றும், தேர்தல் நேரத்தில் மக்களின் தேவையைச் சுரண்டுபவர்கள் மீது எவ்வித சமரசமும் இன்றி நடவடிக்கை பாயும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.