மாநிலங்களவைத் தேர்தல் களம்... ஜார்க்கண்ட்டில் 3 தொகுதிகளில் குதிரை பேர அச்சத்தால் சொகுசு விடுதிகளில் முகாமிட்ட உறுப்பினர்கள்!

 
ஜார்க்கண்ட் ஜார்க்கண்ட்

நாடாளுமன்ற மாநிலங்களவையின் காலியாக உள்ள முக்கிய இடங்களுக்கான தேர்தல் இன்று காலை 9 மணி முதல் விறுவிறுப்பாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. பல்வேறு மாநிலங்களில் உள்ள முக்கிய இடங்களுக்குப் போட்டிகள் நிலவினாலும், ஒட்டுமொத்த தேசிய அரசியல் வட்டாரத்தின் பார்வையும் ஜார்கண்ட் மாநிலத்தின் மீது மட்டுமே மிகத் தீவிரமாகத் திரும்பியுள்ளது. இந்த முக்கியத் தேர்தலில் தங்களின் கட்சி வேட்பாளர்கள் அனைவரும் எவ்வித இழுபறியுமின்றி முழுமையாக வெற்றி பெறுவதை உறுதி செய்ய ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி கூட்டணிகள் இறுதிநேர    கர்வுகளில் இறங்கியுள்ளன.

ஜார்கண்ட் மாநிலத்தில் காலியாக உள்ள 2 மாநிலங்களவை இடங்களுக்கு ஆளுங்கட்சியான ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) சார்பில் பைத்தியநாத் ராம், காங்கிரஸ் சார்பில் பிரணவ் ஜா ஆகியோரும், எதிர்க்கட்சியான பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) சார்பில் சுயேச்சை வேட்பாளரான பரிமள் நத்வானியும் களம் இறங்கியுள்ளனர். தேர்தலில் எதிர்க்கட்சிகள் மூலம் தங்களின் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் கட்சி மாறி வாக்களிப்பதைத் (கிராஸ்-வோட்டிங்) தடுக்கும் நோக்கில், இரு தரப்புமே தீவிரப் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளன.

குறிப்பாக, பாஜக தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணி சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ராஞ்சியில் உள்ள ஒரு சொகுசு விடுதிக்கு அவசர அவசரமாக மாற்றப்பட்டு அங்கு அவர்களுக்குப் பிரத்யேகப் பயிற்சி மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.இதேபோல் ஆளுங்கட்சியான ஜேஎம்எம் மற்றும் காங்கிரஸ் கூட்டணியைச் சேர்ந்த 56 சட்டமன்ற உறுப்பினர்களும் நேற்று இரவு முதலமைச்சர் ஹேமந்த் சோரன் இல்லத்தில் கூடி  ஆலோசனைகளில் ஈடுபட்டு, தங்களின் பலத்தை முழுமையாக நிரூபிக்க  வியூகங்களை வகுத்துள்ளனர். ஒரு வேட்பாளர் வெற்றி பெறக் குறைந்தபட்சம் 28 முதல் விருப்புரிமை வாக்குகள் தேவைப்படும் நிலையில், இரு தரப்பிலும் குதிரை பேர முறைகேடுகளைத் தவிர்க்க எடுக்கப்பட்டுள்ள இந்தச் சொகுசு விடுதி  மற்றும் தீவிரக் கண்காணிப்பு நடவடிக்கைகள் இன்று தேசிய அளவில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளன.