இல்லத்தரசிகளுக்கு அடுத்த அதிர்ச்சி... வெங்காயம் வரலாறு காணாத விலை உயர்வு! தமிழகத்தில் இந்திய தேர்தல் ஆணைய மாநாடு... துணைத் தேர்தல் ஆணையர் மற்றும் உயர்மட்டக் குழுவினர் பங்கேற்பு!

 
சின்ன வெங்காயம்

தமிழகத்தில் வெங்காயம் விலை ஒரு வார காலமாகவே தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் நேற்று திருச்சி காந்திமார்க்கெட் மற்றும் வெங்காய மண்டியில் முதல் ரக சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதற்கு அடுத்த நிலையில் ஒரு கிலோ ரூ.80 மற்றும் ரூ.90 என்ற விலையிலும் விற்பனை ஆகி வருகிறது.

சின்ன வெங்காயத்திற்குப் போட்டியாகப் பல்லாரி எனப்படும் பெரிய வெங்காயத்தின் விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு கிலோ ரூ.25 மற்றும் ரூ.30-க்கு விற்கப்பட்ட பெரிய வெங்காயம், தற்போது ஒரு கிலோ ரூ.50, ரூ.60, ரூ.70 மற்றும் ரூ.80 என விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெங்காயத்தின் இந்த தொடர் விலை உயர்வு இல்லத்தரசிகளுக்குக் கவலையளிப்பதாக உள்ளது. இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், வட மாநிலங்களில் இருந்து வெங்காயம் வரத்து முற்றிலுமாக நின்றுவிட்டதாகவும், ஏற்கனவே இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம்தான் தற்போது விற்பனையில் இருப்பதாகவும், புதிய வெங்காயம் சந்தைக்கு வரும் வரை இந்த விலை உயர்வு நீடிக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.