அலர்ட்... வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தங்கள் செய்யும் பணிகள் தொடக்கம்!
வாக்காளர் பட்டியலில் 18 வயது நிரம்பி வாக்காளர்கள் புதிதாக தங்களது பெயரை சேர்ப்பதற்கும், ஏற்கெனவே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டிருப்பவர்கள், பட்டியலில் பெயர், விலாசம் போன்றவைகளில் திருத்தங்களை மேற்கொள்ளவதற்குமான அட்டவணையை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இம்மாதம் ஆகஸ்ட் 20ம் தேதி முதல் அதிகாரிகள் கணக்கெடுப்பு நடத்த உள்ளனர். 2025 ஜனவரி 1ம் தேதிக்குள் 18 வயது நிறைவடைவோர் அனைவரும் இதில் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க கோரி பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே போன்று அக்டோபர் 29ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அதன் பின்னர் நவம்பர் மாதம் 28ம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியல் வரும் 2025 ஜனவரி 6ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
20026 சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில், 18 வயது நிறைவடைந்தவர்கள் அனைவரும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்து கொள்ளலாம். உங்கள் பகுதியில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் பெயர் சேர்ப்பதற்கான படிவங்களை வழங்கலாம். விண்ணப்பங்களை அலுவலக நாட்களில் வாக்குச்சாவடி நிலை அலுவலர், வாக்காளர் பதிவு அலுவலர்களிடம் அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்குச் சாவடிகளை திருத்தி அமைத்தல், வாக்காளர் பட்டியல் மற்றும் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையில் உள்ள முரண்பாடுகளை நீக்குதல், வாக்காளர் பட்டியலிலுள்ள மங்கலான, மோசமான, தரமற்ற, படங்களை மாற்றுதல், பிரிவு அல்லது பகுதிகள், வாக்குச்சாவடி எல்லைகள் மறு சீரமைப்பு, இடைவெளிகளைக் கண்டறிதல் மற்றும் அத்தகைய இடைவெளிகளைக் குறைப்பதற்கான உத்திகளையும் காலக்கெடுவையும் இறுதி செய்தல் போன்ற திருத்தங்களை இந்த காலத்தில் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பெயர் சேர்த்தலுக்கான விண்ணப்பத்துடன், வசிப்பிட முகவரி மற்றும் வயது குறித்த சான்றுகளுடன் சமர்ப்பிக்க வேண்டும். 25 வயதுக்குக் கீழுள்ளவர்கள் வயது சான்றிதழுக்கான ஆதாரத்தையும் இணைக்க வேண்டும். www.voters.eci.gov.in, https://voterportal.eci.gov.in போன்ற அதிகாரப்பூர்வ இணையதள முகவரி மற்றும் "வாக்காளர் உதவி" கைபேசி செயலி VOTER HELPLINE Mobile App இவைகளின் மூலம் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
