மின்சார விமானம்... உலகின் மிகப்பெரிய சாதனை... ரூ.477 மின்சாரத்தில் 27 நிமிடங்கள் பறந்த விமானம்!

 
மின்சார விமானம்

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பேட்டரியால் இயங்கும் உலகின் மிகப்பெரிய மின்சார விமானம் வெற்றிகரமாகப் பறந்து புதிய சாதனையைப் படைத்துள்ளது. நியூயார்க் விமான நிலையத்தில் நடைபெற்ற சோதனையின்போது, இந்த விமானம் 1,100 அடி உயரம் வரை சென்று சுமார் 27 நிமிடங்கள் வெற்றிகரமாகப் பறந்து தரை இறங்கியது.

இந்த 27 நிமிடப் பயணத்திற்குச் செலவான மின்சாரத்தின் மதிப்பு வெறும் ₹477 மட்டுமே என்று தயாரிப்பு நிறுவனம் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளது. பேட்டரி ஆற்றல் மூலம் இயக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானம் என்ற சாதனையை இது பெற்றுள்ளது.

இந்த வெற்றிகரமான சோதனையைத் தொடர்ந்து, 'ஹார்ட் ஏரோஸ்பேஸ்' (Heart Aerospace) நிறுவனம் 30 பயணிகள் வரை அமர்ந்து செல்லக்கூடிய வணிகரீதியான மின்சாரப் பயணிகள் விமானத்தை உருவாக்கி வருகிறது.