தூத்துக்குடியில் இருந்து ஹரியானாவுக்கு ரயிலில் மின்சார கார்கள் அனுப்பி வைப்பு!
Aug 6, 2026, 14:46 IST
சரக்கு ரயில் போக்குவரத்து மூலம் சூழல்நட்பு மின்சார வாகனங்களின் போக்குவரத்தை அதிகரிக்கும் வகையில், தூத்துக்குடியில் இருந்து ஹரியானா மாநிலத்திற்கு மின்சார கார்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையிலான வாகனங்களைப் பாதுகாப்பாகவும் விரைவாகவும் தொலைதூர இடங்களுக்குக் கொண்டு செல்ல ரயில் போக்குவரத்து பெருமளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
சாலைப் போக்குவரத்தைக் காட்டிலும் ரயில்கள் மூலம் மின்சார வாகனங்களைக் கொண்டு செல்வது எரிபொருள் பயன்பாட்டைக் குறைத்துச் சுற்றுச்சூழலுக்கு மேலும் நன்மை அளிப்பதாக அமைகிறது.
தூத்துக்குடி துறைமுகம் மற்றும் அதன் தடையற்ற ரயில் இணைப்புகளைப் பயன்படுத்தித் தமிழகத்தில் உற்பத்தியாகும் வாகனங்கள் நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கும் தடையின்றி அனுப்பப்பட்டு வருகின்றன.
