நாளை ஒருநாள் மின்சார ரயில் சேவை நிறுத்தம்!

 
இன்று புறநகர் ரயில் சேவையில் மாற்றம்


இந்தியாவைப் பொறுத்தவரை தொலை தூர பயணங்கௌக்கு பொதுமக்கள் பெரும்பாலும்  ரயில் பயணங்களையே  தேர்வு செய்து வருகின்றனர். தினமும் லட்சக்கணக்கான பயணிகள் ரயிலில் பயணம் செய்து வருகின்றனர்.  சென்னையை பொறுத்தவரை பொதுப்போக்குவரத்தில் மின்சார ரயில்களின் தேவை மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.

அட்டவணை

தினமும் அலுவலகம் செல்பவர்கள், பள்ளி கல்லூரி செல்பவர்கள் சென்னையின் புறநகர் பகுதிகளில் இருந்து வந்து சேர்வதற்கு மிகுந்த உறுதுணையாக இருந்து வருகிறது. இந்நிலையில் சென்னை எழும்பூர் – சென்னை கடற்கரை இடையே தண்டவாள பணிகள் நடைபெற்று வருகிறது.

அட்டவணை


இதனையடுத்து நாளை ஜூலை14ம் தேதி ஞாயிற்றுக்கிழமை  ஒருநாள் மட்டும் ரயில் சேவை நிறுத்தப்படுவதாக ரயில்வே நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.  அத்துடன் நாளை  எழும்பூரிலிருந்து இயக்கப்படவுள்ள மின்சார ரயில்களுக்கான அட்டவணையையும் தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.