உஷார்... செப்.16 வரை சென்னை கடற்கரை - திருவள்ளூர், கடற்கரை - கூடுவாஞ்சேரி இடையே மின்சார ரயில்கள் ரத்து!

 
கல்லூரி மாணவர்களுக்குள் மோதல்…!! “நீங்க போட்ட உயிர் பிச்சையில வாழ விரும்பல…” உருக்கமாக பேசி ரயில் முன்பு பாய்ந்த மாணவர்!!
 

சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து தாம்பரம் - கூடுவாஞ்சேரி இடையே செல்லும் மின்சார ரயில்கள் சில முழுமையாகவும், பகுதியாகவும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போன்று கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து திருவள்ளூர் - அரக்கோணம் செல்லும் ரயில்களும் பகுதியாக / முழுமையாக இந்த தேதிகளில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாற்று ஏற்பாடுகளைச் செய்துக்கோங்க. 

ரயில்

சென்னை கடற்கரை -விழுப்புரம் வழித்தடத்தில் செப்.16ம் தேதி திங்கட்கிழமை இரவு 10.40 மணி முதல் செப்.17ம் தேதி அதிகாலை 4.30 மணி வரையில் (5 மணி நேரம் 50 நிமிடம்) பராமரிப்பு பணி நடைபெறுவதால் சில மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாகவும், சில ரயில்கள் பகுதி நேரமாக ரத்து செய்யப்படுவதாகவும் தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

முழுவதும் ரத்து செய்யப்படும் ரயில்கள்

சென்னை கடற்கரையிலிருந்து செப்டம்பர் 16ம் தேதி இரவு 8.25, 8.55, 10.20 ஆகிய நேரங்களில் புறப்பட்டு தாம்பரம் செல்லும் மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.அதே போன்று சென்னை கடற்கரையிலிருந்து செப்.16ம் தேதி இரவு 7.50 மணிக்கு புறப்பட்டு திருவள்ளூர் செல்லும் மின்சார ரயிலும், இரவு 10.45 மணிக்கு புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரயிலும் ரத்து செய்யப்படுகிறது.சென்னை கடற்கரையில் இருந்து இன்று செப்.14ம் தேதி மற்றும் செப்.17ம் தேதி காலை 4.05 மணிக்கு புறப்பட்டு அரக்கோணம் செல்லும் மின்சார ரயில்  முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

மின்சார ரயில்

திருவள்ளூரில் இருந்து செப்.16ம் தேதி இரவு 9.35 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.கும்மிடிப்பூண்டியிலிருந்து செப்.16ம் தேதி இரவு 9.55 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரயில் ரத்து செய்யப்படுகிறது.

பகுதி நேரம் ரத்து செய்யப்படும் ரயில்கள்

சென்னை கடற்கரையிலிருந்து செப்.16ம் தேதி இரவு 11.05, 11.30, 11.59 ஆகிய நேரங்களில் புறப்பட்டு தாம்பரம் செல்லும் மின்சார ரயில்கள் சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, எழும்பூரில் இருந்து இயக்கப்படும்.

சென்னை கடற்கரையிலிருந்து இன்று செப்.14ம் தேதி மற்றும் செப்.17ம் தேதி புறப்பட்டு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரயில் சென்னை கடற்கரை- எழும்பூர் இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, எழும்பூரில் இருந்து இயக்கப்படும்.

செங்கல்பட்டிலிருந்து செப்.16ம் தேதி இரவு 9.10, 10.10, 11 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரயில் சென்னை எழும்பூர் - கடற்கரை இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, எழும்பூரில் நிறுத்தப்படும்.

திருமால்பூரில் இருந்து செப்.16ம் தேதி இரவு 8 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரயில் சென்னை எழும்பூர் - கடற்கரை இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, எழும்பூரில் நிறுத்தப்படும்.

கூடுவாஞ்சேரியிலிருந்து செப்.16ம் தேதி இரவு 10.10, 10.40, 11.15 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரயில் தாம்பரம்- சென்னை கடற்கரை இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, தாம்பரத்தில் நிறுத்தப்படும்.