சென்னை தாம்பரம் கடற்கரை இடையே மின்சார ரயில்கள் ரத்து... பொதுமக்கள் கடும் அவதி!

 
மின்சார ரயில்

 தாம்பரத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக  சென்னை புறநகர் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாகத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.  காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதற்கு பதிலாக சென்னை கடற்கரை - பல்லாவரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருவதாகவும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருமால்பூர் மற்றும் அரக்கோணம் ரயில்கள் வழக்கம் போல செயல்படும் எனவும் தெற்கு  ரயில்வே அறிவித்துள்ளது.

கல்லூரி மாணவர்களுக்குள் மோதல்…!! “நீங்க போட்ட உயிர் பிச்சையில வாழ விரும்பல…” உருக்கமாக பேசி ரயில் முன்பு பாய்ந்த மாணவர்!!

குறிப்பாக கடற்கரை- பல்லாவரம் இடையே 20 முதல் 30 நிமிட இடைவெளியில் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இன்று மாலை 5 மணிக்கு மேல் வழக்கம்போல் ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து  மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் 50 கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் வரும் ரயில்கள் பல்லாவரத்திலேயே மீண்டும் சென்னை கடற்கரைக்கு திரும்பி செல்கிறது.

மின்சார ரயில்

அதுபோல் செங்கல்பட்டில்  இருந்துவரும் மின்சார ரயில்கள் கூடுவாஞ்சேரியில் திரும்பி செல்கின்றன.  கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு, திருமால்பூர் செல்லும் மின்சார ரயில்கள் தாம்பரம் விரைவு ரயில் நடைமேடை 5-6 ல் நின்று விட்டு செங்கல்பட்டு திருமால்பூர் செல்கிறது. மறுமார்கத்திலும் திருமால்பூர், செங்கல்பட்டில்  இருந்து சென்னை கடற்கரைக்கு செல்லும் ரயில்கள் தாம்பரம் ரயில் நிலையத்தில் 5-6 நடைமேடைகளில் நின்று சென்னை கடற்கரைக்கு செல்வது குறிப்பிடத்தக்கது.  

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!