பயணிகள் கனிவான கவனத்திற்கு... மதுரை - போடி மின்சார ரயில் சேவை தொடக்கம்!

தமிழகத்தில் மதுரையில் இருந்து போடிநாயக்கனூர் வரை தினசரி வந்து செல்லும் பேசஞ்சர் ரயில் மின்சார ரயிலாக மாற்றப்பட்டு ரயில் சேவை தொடங்கியுள்ளது. அதே போல் சென்னையில் இருந்து வாரத்திற்கு 3 நாள்கள் போடிநாயக்கனூருக்கு வந்து செல்லும் அதிவிரைவு ரயில் வண்டி இரண்டுமே ஒரே நாளில் மின்சார ரயிலாக மாற்றப்பட்டு போக்குவரத்து தொடங்கியது. மின்சார ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டதால் ரயில்வே இருப்புப் பாதைகளில் உள்ள மின்சார கம்பங்களில் 25,000 ஓல்ட் மின்சாரம் செயல் திறன் நடைமுறையில் உள்ளது. இதனால் மின் கம்பிகளுக்கு இடையே இருப்புப் பாதைகளில் அத்துமீறி நுழைபவர்கள் மற்றும் சுற்றி திரிபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ரயில் நிலையத்தில் 2010 ம் ஆண்டு மீட்டர்கேஜ் ரயில் போக்குவரத்து போக்குவரத்து நிறுத்தப்பட்டு சுமார் 12 ஆண்டுகளுக்கு பின்பு சுமார் ரூ 436 கோடி செலவில் அகல ரயில் இருப்புப் பாதையாக மாற்றப்பட்டு மதுரையில் இருந்து போடிநாயக்கனூருக்கும் போடிநாயக்கனூரில் இருந்து மதுரைக்கும் தினசரி பேசஞ்சர் ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சென்னையில் இருந்து வரும் ரயில் மதுரை மார்க்கம் வழியாக போடிநாயக்கனூர் வந்துடுகிறது. சென்னையில் இருந்து மதுரை வரை மின்சார ரயிலாக வரக்கூடிய அதிவிரைவு ரயில் வண்டி மதுரையில் இருந்து போடிநாயக்கனூர் வரை டீசல் இன்ஜின் ஆக மாற்றப்பட்டு வருகிறது. இதனால் சுமார் 40 நிமிடம் காலதாமதம் ஏற்படுகிறது. இதனையடுத்து போடிநாயக்கனூரில் இருந்து மதுரை வரை மின்சார ரயில் போக்குவரத்து தொடங்குவதற்கான திட்டங்கள் வடிவமைக்கப்பட்டு பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில் விரைவில் மதுரையில் இருந்து போடிநாயக்கனூருக்கு மின்சார ரயில் போக்குவரத்து தொடங்குவதற்கு சோதனை ஓட்டங்கள் நடைபெற்று வருகிறது.
பிப்ரவரி 2ம் தேதி முதன்முறையாக மின்சார ரயில் எஞ்சின் சோதனை ஓட்டம் நடைபெற்றது. சோதனை ஓட்டம் நடைபெற்ற ஓரிரு நாட்களிலேயே இன்று முதல் சென்னையில் இருந்து காட்பாடி நாமக்கல் சேலம், ஈரோடு கரூர், திண்டுக்கல், மதுரை வழியே வாரத்திற்கு மூன்று நாட்கள் இயக்கப்படும் சென்னை அதிவிரைவு ரயில் மற்றும் மதுரையில் இருந்து தினசரி போடிநாயக்கனூருக்கு இயக்கப்படும் பேசஞ்சர் ரயில் ஆகிய இரண்டுமே ஒரே நாளில் மின்சார ரயிலாக மாற்றப்பட்டு பயணிகள் போக்குவரத்து தொடங்கியது. 110 கிலோ மீட்டர் வேகத்தில் சோதனை செய்யப்பட்ட மின்சார ரயில் முதல் நாள் என்பதால் மதுரையில் இருந்து சுமார் 85 முதல் 90 கிலோமீட்டர் வேகத்தில் வந்தது குறிப்பிடத்தக்கது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!