சர்ச்சை வீடியோ... அரசு வாகனத்தில் பணிநேரத்தில் மது அருந்தும் மின்வாரிய அதிகாரி!

 
ஏழுமலை

 சென்னை திருவொற்றியூர் மின்வாரிய அலுவலகத்தில் பணிபுரிந்து வருபவர் ஏழுமலை . மின்வாரிய அதிகாரியான இவர் அரசு வாகனத்தில் அமர்ந்து மது அருந்தியுள்ளார். இது குறித்த வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து உடனடியாக ஏழுமலை  சஸ்பெண்ட் செய்யப்பட்டார். திருவொற்றியூர்  மின்வாரிய அலுவலகத்தில்  லைன் இன்ஸ்பெக்டராக வேலை செய்து வந்தவர் ஏழுமலை.


இவர் கடந்த 3 தினங்களுக்கு முன், மின்சாரம் பழுது பார்க்க எடுத்துச் செல்லும் எப்ஓசி அரசு வாகனத்தில் அமர்ந்து ஏழுமலை மது அருந்திக் கொண்டிருந்தார்.மின்வாரிய உதவியாளர் குப்புசாமி இதை பார்த்து அதிர்ச்சியடைந்து   ஏழுமலையிடம் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு நீ வெறும் உதவியாளர் தான்  என்னை கேள்வி கேட்கக் கூடாது எனக் கூறி குப்புசாமிக்கு ஏழுமலை மிரட்டல் விடுத்துள்ளார்.  

ஏழுமலை

இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதில் இந்த   விவகாரம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.  இதனையடுத்து மின்வாரிய அதிகாரிகள், ஏழுமலையிடம்   தீவிர விசாரணை மேற்கொண்டனர்.  உயர் அதிகாரிகள் உத்தரவின் பேரில் பணி நேரத்தில் அரசு வாகனத்தில் அமர்ந்து மது அருந்தியதை காரணம் காட்டி  ஏழுமலையை சஸ்பெண்ட் செய்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும்  வைரலாகி வருகிறது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web