தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு செல்ல தடை... சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்!
தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் வருகை தர உள்ளார். இதனையடுத்து நீலகிரி மாவட்டத்தில் தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் காலை 6 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை வாகன சுற்றுலா செயல்படாது என அறிவிக்கப்பட்டுளளது. பிற்பகலில் வாகனச் சுற்றுலா வழக்கம்போல் செயல்படும் என வனத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள முதுமலை புலிகள் காப்பகத்துக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். தமிழகம் முழுவதும் பள்ளிகளில் விடுமுறை தொடங்கப்பட்டு இருப்பதால் சுற்றுலாவுக்கு குடும்பம் குடும்பமாக சென்று வருகின்றனர். இந்தப்பகுதியில் கோடை சீசன் தொடங்கி உள்ளதால் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு வரை பரவலாக பெய்த தொடர் மழையால் வனப்பகுதி பசுமைக்கு திரும்பி உள்ளது. இதன் எதிரொலியாக காட்டு யானைகள் உட்பட வனவிலங்குகளின் நடமாட்டமும் அதிகரித்திருப்பதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!
