அமெரிக்காவைவிட இந்தியாவே மேலானது ... எலான் மஸ்க் சர்ச்சை விமர்சனம்!
இந்தியாவில் நேற்று நவம்பர்23ம் தேதி மகாராஷ்டிரம், ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு விட்டன. அத்துடன் ராஜஸ்தான், மேற்கு வங்கம், அஸ்ஸாம், பீகார், கர்நாடகம், மத்தியப் பிரதேசம், சிக்கிம், கேரளம், சத்தீஸ்கர், மேகாலயம், குஜராத் மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கையும் நேற்று நடைபெற்றது.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நவம்பர் 6 ம் தேதி அதிகாலை முதலே எண்ணப்பட்டு, இன்று நவம்பர் 24 வரையில் எண்ணிக்கை தொடரப்பட்டு வருகிறது. இதனை எலான் மஸ்க் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.இது குறித்து எலான் மஸ்க், தனது எக்ஸ் பதிவில் ``இந்தியாவில் ஒரே நாளில் 640 மில்லியன் வாக்குகள் எண்ணப்பட்டு விட்டன. ஆனால், கலிஃபோர்னியாவில் இன்னும் எண்ணப்பட்டு வருகிறது'' எனப் பதிவிட்டுள்ளார்.
India counted 640 million votes in 1 day.
— Elon Musk (@elonmusk) November 24, 2024
California is still counting votes 🤦♂️ https://t.co/ai8JmWxas6
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நவம்பர் 5 ம் தேதி மாலையில் தொடங்கி மறுநாள் காலை வரையில் நடைபெற்றது. வாக்குப் பதிவு முடிவுற்றவுடனேயே வாக்கு எண்ணிக்கையும் தொடங்கப்பட்டு, அதிக வாக்குகளைப் பெற்ற டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இருப்பினும், சில மாகாணங்களில் இன்று வரையிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று கொண்டுதான் இருக்கிறது.
வாக்கு எண்ணிக்கையில் தாமதம் குறித்து அமெரிக்க செய்தி நிறுவனம் ``மற்ற மாகாணங்களைக் காட்டிலும் கலிஃபோர்னியாவில்தான் அதிகப்படியான வாக்குகள் (16 மில்லியனுக்கும் அதிகமாக) பெறப்பட்டுள்ளது. கலிஃபோர்னியாவில் மின்னஞ்சல் வாக்குகள்தான் எண்ணிக்கையைத் தாமதப்படுத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
2004 தேர்தலில் 67 சதவிகித வாக்காளர்கள் நேரில் வாக்களித்தனர்; ஆனால், இந்தாண்டு தேர்தலில் 90 சதவிகித வாக்காளர்கள் மின்னஞ்சல் மூலம் வாக்களித்துள்ளனர். சிலர் அஞ்சல் மூலமாகவும் வாக்களித்தனர். இந்த அஞ்சல் வாக்குகளில் சிலர் கையொப்பத்தை மறந்துவிடுவது, தவறான இடத்தில் கையொப்பமிடுவது, சரியான உறையில் தங்கள் வாக்குச்சீட்டை இணைக்காதது போன்ற பிழைகளால் வருவதாலும் தாமதமாகின்றன.
இவ்வாறான பிழையுள்ள வாக்குச் சீட்டுகளைச் சரிசெய்ய டிசம்பர் 1 ம் தேதி வரையில் கெடு அளிக்கப்பட்டுள்ளது. அதற்குள் அந்தந்த வாக்காளர்களை கண்டுபிடிப்பது கடினமானாலும், செய்யத்தான் வேண்டியிருக்கிறது.
மேலும், சனிக்கிழமை நவம்பர் 23ம் தேதி நிலவரப்படி, 1,29,286 வாக்குச் சீட்டுகளில் பிழைத் திருத்தம் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. ஃபுளோரிடாவில் 25 சதவிகித வாக்காளர்கள் மட்டுமே அஞ்சல் மூலம் வாக்களித்தனர். அதன் முடிவுகள் தேர்தல் நாள் இரவிலேயே 99 சதவிகிதம் வரையில் எண்ணப்பட்டு விட்டன'' எனத் தெரிவித்துள்ளனர்.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!