“ஸ்டார்லிங்கால் அம்பானியின் தொழில் முடங்காது” - எலான் மஸ்க் விளக்கம்!
இந்தியாவில் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணையச் சேவையைத் தொடங்குவதற்கான இறுதி அனுமதி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ள நிலையில், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துடன் நிலவும் போட்டி குறித்து எலான் மஸ்க் கருத்துத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவை முழுமையாக அறிமுகப்படுத்தப்பட்டால் சந்தையில் போட்டி அதிகரிக்கலாமே தவிர, முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனத்தின் தொழில் அதனால் எந்தவிதத்திலும் முடங்கிப் போய்விடாது என்று மஸ்க் தெளிவுபடுத்தியுள்ளார்.

இந்தியாவில் ஏற்கெனவே இணையச் சேவைகளுக்கான கட்டணம் மிகக் குறைவாக உள்ள சூழலில், ஜியோவின் விலைக்குப் போட்டியாகச் ஸ்டார்லிங்க் தனது சேவைகளை மலிவான விலையில் வழங்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவையைத் தொடங்குவதற்கான இறுதி மத்திய அரசின் ஒப்புதல்கள் கிடைக்காதது குறித்து எலான் மஸ்க் தரப்பில் தனது அதிருப்தி வெளிப்படுத்தப்பட்டிருந்தாலும், இந்தியச் சந்தை மீது பெரும் ஆர்வம் காட்டப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
