யூதர்கள் வெறுப்பு பிரச்சாரம்.. புதிய சர்ச்சையில் சிக்கிய எலன் மஸ்க்..!!

 
 எலன் மஸ்க்

யூத எதிர்ப்பு கருத்துக்கு ஆதரவு தெரிவித்து எலான் மஸ்க் சர்ச்சையில் சிக்கினார்.

உலகின் மிகப் பெரும் பணக்கார தொழிலதிபர்களில் ஒருவரான அமெரிக்காவைச் சேர்ந்த எலன் மஸ்க், 'டுவிட்டர்' சமூக வலைதளத்தை வாங்கியுள்ளார்.இது தற்போது 'எக்ஸ்' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த தளத்தை எலன் மஸ்க் வாங்கியதில் இருந்து, பல சர்ச்சைகளை சந்தித்து வருகிறார்.இந்நிலையில், யூதர்கள் எதிர்ப்பு தொடர்பாக, எக்ஸ் சமூக வலைதளத்தில் ஒருவர் பதிவிட்டிருந்தார்.

Elon Musk Said Antisemitic Social-Media Post Was 'the Actual Truth' - WSJ

'வெள்ளை நிற மக்களுக்கு எதிராக யூதர்கள் வெறுப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்' என, அந்த பதிவில் கூறப்பட்டிருந்தது. 'அவர் உண்மையை கூறியுள்ளார்' என, எலன் மஸ்க் குறிப்பிட்டிருந்தார்.இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், யூத எதிர்ப்பு பதிவுக்கு அருகில் தங்களுடைய விளம்பரங்கள் வெளியிடப்பட்டிருந்தால், விளம்பங்களை நிறுத்துவதாக, 'ஐ.பி.எம்., - ஆப்பிள், ஆரகிள்' உட்பட பல நிறுவனங்கள் அறிவித்தன.இந்நிலையில், அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையும், இதற்கு கண்டனம் தெரிவித்து உள்ளது.

Judaism: Founder, Beliefs & Facts | HISTORY

இது குறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஆன்ட்ரூ பேட்ஸ் கூறியுள்ளதாவது:யூத எதிர்ப்பு மற்றும் இனவெறியை துாண்டுவதாக எலன் மஸ்க்கின் கருத்து உள்ளது. இது, அமெரிக்காவின் கொள்கை மற்றும் பாரம்பரியத்துக்கு எதிரானது. இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதல்நடத்தியதில் யூதர்கள் அதிகளவில் கொல்லப்பட்டுள்ளனர். இந்த சூழ்நிலையில், பொய்யான தகவல்களை பரப்புவதை ஏற்க முடியாது.இவ்வாறு அவர் கூறினார்.

From around the web