ஸ்பேஸ் எக்ஸ் பெயர் மாற்றம்: 'எஸ்.ஐ.' எனப் பெயர் சூட்டியுள்ளார் எலான் மஸ்க்!

 
எலான் மஸ்க்

உலகின் முன்னணி பணக்காரரும், ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனங்களின் தலைவருமான எலான் மஸ்க், தனது நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவுப் பிரிவின் பெயரை அதிகாரப்பூர்வமாக மாற்றியுள்ளார்.

சமீபத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப், 'செயற்கை நுண்ணறிவு' என்பதற்குப் பதிலாக, எதிர்காலத் தொழில்நுட்பத்தைக் குறிக்கும் வகையில் 'சூப்பர் இன்டெலிஜென்ஸ்' என்ற சொல்லைப் பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.

 எலன் மஸ்க்

இந்த யோசனையை ஏற்று, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் நுண்ணறிவுப் பிரிவுக்கு 'SpaceX SI' எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "ஆம், நாம் பெயர் மாற்றம் செய்கிறோம். ஏ.ஐ. என்பதை விட எஸ்.ஐ. என்ற பெயர் நன்றாக இருக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.