இடைத்தேர்தலில் மரகதம் குமரவேல், சத்யபாமாவுக்கு வாய்ப்பளிக்க தவெக முடிவு!

 
இடைத்தேர்தல் மதுராந்தகம் தாராபுரம் மரகதம் குமரவேல் சத்யபாமா

தமிழகத்தில் நடைபெறவுள்ள இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் அக்டோபர் 6-ம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலில் தவெக சார்பில் போட்டியிட மரகதம் குமரவேல் மற்றும் சத்யபாமா ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

மரகதம்

இவர்கள் இருவரும் ஏற்கனவே அதிமுக சார்பில் முறையே அதே தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர்கள் என்பதும், பின்னர் தங்களது எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இடைத்தேர்தல் குறித்து இன்று நடைபெற்ற கட்சியின் முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில், அவர்களுக்கு மீண்டும் அதே தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பு வழங்குவது குறித்துத் தலைவர் விஜய் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.