பல கோடி ரூபாய் மதிப்பிலான மரகத முருகர் சிலை திருட்டு - கோயில் பூட்டை உடைத்து கொள்ளை!
Sep 2, 2026, 13:30 IST
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள பால தண்டாயுதபாணி கோயிலில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள மரகத முருகன் சிலையை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
மதுராந்தகம் அருகே அமைந்துள்ள பால தண்டாயுதபாணி கோயிலின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், அங்கு வைக்கப்பட்டிருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான மரகத முருகன் சிலையைத் திருடிச் சென்றுள்ளனர்.
இச்சம்பவம் குறித்துக் கோயில் நிர்வாகத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
கோயிலின் பூட்டை உடைத்து சிலையைக் கடத்திச் சென்ற குற்றவாளிகளைக் விரைந்து கைது செய்யும் பொருட்டு, தனிப்படைகள் அமைக்கப்பட்டுத் தீவிரத் தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
