பேரதிர்ச்சி... சத்குரு ஜக்கி வாசுதேவுக்கு அவசர அறுவை சிகிச்சை... மருத்துவர் பேட்டி!

 
sathguru

பிரபல ஆன்மீக குரு சத்ருகு ஜக்கி வாசுதேவ் மூளை அறுவை சிகிச்சைக்காக டெல்லி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
கடந்த சில நாட்களாக ஜக்கி வாசுதேவ் கடுமையான தலைவலியால் அவதிப்பட்டு வருவதாகக் கூறிய நிலையில், கடந்த மார்ச் 17ம் தேதி, அவரது மூளையில் வீக்கமும், ரத்தப்போக்கும் இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர்.


இதனையடுத்து டெல்லியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவசரமாக மூளையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. டெல்லியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் டாக்டர் வினித் சூரி, டாக்டர் பிரணவ் குமார், டாக்டர் சுதீர் தியாகி மற்றும் டாக்டர் எஸ் சட்டர்ஜி ஆகியோர் அடங்கிய குழுவினர், ஜக்கி வாசுதேவுக்கு அறுவை சிகிச்சை செய்தனர்.

சத்குரு

அறுவைசிகிச்சைக்குப் பின்னர், சத்குரு வென்டிலேட்டரில் இருந்து வெளியேற்றப்பட்டு, தற்போது குணமடைந்து வருகிறார். அவரது உடல்நிலை நன்கு முன்னேற்றமடைந்து வருவதாக  மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web