ஹாங்காங் தீவைச் சுற்றி 45 கி.மீ நீச்சல்... 10 மணி நேரத்தில் சாதனை படைத்த 21 வயது இளைஞர்!
ஹாங்காங் தீவைச் சுற்றி சுமார் 45 கிலோமீட்டர் தூரத்தை கடலில் நீந்திக் கடந்து 21 வயது இளைஞர் புதிய சாதனை படைத்துள்ளார். எமெரிக் பேயர் என்ற அந்த இளைஞர், இந்த நீண்ட தூரத்தை 10 மணி நேரம் 22 நிமிடங்கள் 59 வினாடிகளில் நிறைவு செய்துள்ளார்.
கடந்த நவம்பர் 2-ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு ஹாங்காங்கின் சாய் வான் நீச்சல் துறை அருகே தனது பயணத்தைத் தொடங்கிய அவர், கடல் நீரோட்டங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து நிறைந்த பகுதிகளைக் கடந்து நீந்தினார். பிற்பகல் 2.22 மணியளவில் இலக்கை அடைந்தார்.
இதற்கு முன்பு 2025-ஆம் ஆண்டு வாரிஸ் மில்ஸ் 10 மணி நேரம் 35 நிமிடங்கள் 58 வினாடிகளில் படைத்திருந்த சாதனையை எமெரிக் முறியடித்துள்ளார். இதன் மூலம் அதிகாரப்பூர்வ HK360 நீச்சல் சுற்றை நிறைவு செய்த 11-வது நபராகவும், இந்தச் சாதனையைப் படைத்த மிக இளையவராகவும் அவர் மாறியுள்ளார்.
சுமார் ஆறு மாத காலப் பயிற்சிக்குப் பிறகு இந்த முயற்சியில் ஈடுபட்ட எமெரிக்கிற்கு, முன்னாள் சாதனையாளர் வாரிஸ் மில்ஸ் உள்ளிட்டோர் நீச்சலின்போது உற்சாகம் அளித்தனர். கடல் பாதுகாப்பு மற்றும் நீர்நிலை ஆராய்ச்சி தொடர்பான விழிப்புணர்வுக்கும் நிதி திரட்டும் நோக்கில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது
