சர்ச்சை வீடியோ... பேரரசர் அக்பர்... பெண்களை கற்பழிப்பதை வழக்கமாக வைத்திருந்தவர்... கல்வி அமைச்சரின் வைரல் பேச்சு!

 
மதன் திலாவர்


ராஜஸ்தான் மாநிலத்தில் கல்வி அமைச்சர், முகாலாய பேரரசர் அக்பரை 'கற்பழிப்பாளர்' என்று அழைத்தார்ராஜஸ்தான் மாநிலத்தின் கல்வி அமைச்சர் மதன் திலாவர் முகலாய பேரரசர் அக்பரை, "அவர் வலுக்கட்டாயமாக பெண்களை கற்பழிப்பதை வழக்கமாக கொண்டிருந்தவர்" என்று கூறி சர்ச்சையைத் தூண்டும் வகையில் பேசியுள்ளார். மேலும், அக்பரை "சிறந்த ஆளுமை" என்று குறிப்பிடும் பள்ளி பாடப்புத்தகங்களில் இருந்து அந்தக் குறிப்புகளை நீக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். 


 


"அக்பர் ஒரு சிறந்த ஆளுமை இல்லை. அவர் ஒரு ஆக்கிரமிப்பாளர், கற்பழிப்பாளர். அவர் பெண்களை வலுக்கட்டாயமாக அழைத்து பாலியல் பலாத்காரம் செய்தார். அத்தகைய மனிதரை ஒரு பெரிய ஆளுமை என்று அழைப்பது முட்டாள்தனம்" என்று திலாவர் பலோத்ராவில் செய்தியாளர்களிடம் கூறினார்.பள்ளிப் பாடப்புத்தகங்களில் மேற்கொள்ளப்படும் மாற்றங்கள் குறித்த விவாதத்திற்கு பதிலளித்துப் பேசும் போது ராஜஸ்தான் மாநிலத்தின் கல்வி அமைச்சர் இந்தக் கருத்தைத் தெரிவித்தார். தனது தீவிர இந்துக் கருத்துக்களுக்கு பெயர் பெற்றவரான மாநில கல்வி அமைச்சர் மதன் திலாவர், பாடத்திட்டத்தை மாற்ற விரும்பவில்லை என்றும், பாடப்புத்தகங்களில் உள்ள தவறான தகவல்களை அழிக்க விரும்புவதாகவும் கூறியுள்ளார்.

மதன் திலாவர்
 


"வீர் சாவர்க்கர் மற்றும் சிவாஜி போன்ற நமது மூதாதையர்களைப் பற்றி பல தவறான தகவல்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அந்த அறிக்கைகள் சரி செய்யப்படும்" என்று அவர் கடந்த மாதம் செய்தியாளர் சந்திப்பின் போது மேற்கோள் காட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. 
மேலும், ராஜஸ்தானில் பள்ளிகளில் 'சூர்ய நமஸ்கார்' கட்டாய அமைப்புக்கு பதிலளித்த திலாவர், இது படிப்படியாக செயல்படுத்தப்படுகிறது. தற்போது சூர்ய நமஸ்கார் தொடங்கிவிட்டது. இன்னும் சில நாட்களில் அனைத்து பள்ளிகளிலும் 'சூர்ய நமஸ்காரம்' வழக்கமானதாகி விடும்'' என்றார். கல்வி அமைச்சரின் இந்த பேச்சு சர்ச்சையாகி வருகிறது.

From around the web