3 பேரைச் சுட்டுக் கொன்ற முன்னாள் ராணுவ வீரர் என்கவுண்டரில் பலி!
மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூடு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நிலத்தகராறு காரணமாகத் தனது அண்டை வீட்டார் 3 பேரை அவர் அடுத்தடுத்துச் சுட்டுக் கொன்றுள்ளார். இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசாரையும் அவர் துப்பாக்கியால் சுட்டுத் தாக்க முயன்றுள்ளார்.
போலீசார் அவரைச் சரணடையச் சொல்லியும் கேட்காத அந்த ராணுவ வீரர், தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளார். தற்காப்பிற்காகப் போலீசார் நடத்திய பதில் தாக்குதலில் அந்த முன்னாள் ராணுவ வீரர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஒரே நாளில் 4 பேர் உயிரிழந்த இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த என்கவுண்டர் குறித்துத் தகவல் அறிந்த உயர்மட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் உடற்கூறாய்விற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அப்பகுதியில் மேலும் அசம்பாவிதங்கள் தவிர்க்கப் பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.
