அரசு பள்ளிகளில் வடமாநிலத்தவர் குழந்தைகளை சேர்க்க ஊக்குவிக்க வேண்டும்... பள்ளிக்கல்வித்துறை!

 
பள்ளிக்கல்வித்துறை

 தமிழகம் முழுவதும்  அரசுப் பள்ளிகளில் பயிலும் வட மாநிலத்தவர்கள் குழந்தைகளுக்கு தமிழ் மொழியை பயிற்றுவிக்கும் முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து  பள்ளிக்கல்வி இயக்குனர்  விடுத்துள்ள செய்திக்குறிப்பில்  வடமாநிலத்தவர் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்ப்பதற்கு ஊக்குவிக்க வேண்டும், அவ்வாறு சேர்ந்து அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு உதவித்தொகை, பரிசுகள் மற்றும் இதர சலுகைகள் அளித்து உற்சாகப்படுத்த வேண்டும் எனக் கூறியுள்ளார்.  

பள்ளிக்கல்வித்துறை

பள்ளிக்கல்வி இயக்குனர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் ”வடமாநிலத்தவர்கள் தங்களது குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்த்து தமிழ் மொழியை படிக்க வைப்பதாகவும் மாணவர்கள் விரும்பி படித்து நன்கு புலமை பெற்றுள்ளதாகவும் வடமாநிலத்தவர்கள் தங்களது குழந்தைகளுக்கு தமிழ்மொழியை பயிற்றுவிப்பதற்கான முயற்சிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வித்துறை

தங்கள் மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் பணிபுரிந்து வாழும் வடமாநிலத்தவர் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்ப்பதற்கு ஊக்குவிக்கும்படியும்  அவ்வாறு சேர்ந்து கல்வி பயிலும் மாணவர்கள் அரசு நடத்தும் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்றால் உதவி தொகை பரிசுகள் மற்றும் இதர சலுகைகள் அளித்து உற்சாகப்படுத்துமாறும் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும் அனைத்து அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தும்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டு இருப்பதாக  கூறப்பட்டுள்ளது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க