இன்றுடன் முடிகிறது... BSNL மெகா ஆஃபர்.. ஒரு ரீ- சார்ஜில் வருடம் முழுவதும் ஏகப்பட்ட நன்மைகள்!

 
பிஎஸ்.என்.எல்

அரசு பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் அறிமுகம் செய்த மிகவும் லாபகரமான 'பாரத் கனெக்ட் 26' சிறப்பு ரீசார்ஜ் திட்டம் முடிவுக்கு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் ரீசார்ஜ் செய்ய இன்று பிப்ரவரி 24 கடைசி நாள் என்று பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது. மாதாந்திர ரீசார்ஜ் தொல்லை இல்லாமல், ஒரு வருடம் முழுவதும் நிம்மதியாகப் பேசவும், இணையத்தைப் பயன்படுத்தவும் விரும்பும் வாடிக்கையாளர்களுக்காக இந்தத் திட்டம் கொண்டு வரப்பட்டது.

ரூ.2,626 திட்டத்தின் சிறப்பம்சங்களாக 365 நாட்கள் என்று ஒரு முழு ஆண்டு வேலிடிட்டி உண்டு. தவிர நாளொன்றுக்கு 2.6ஜிபி அதிவேக டேட்டா. ஒரு ஆண்டு முழுவதும் மொத்தம் 949 ஜிபி டேட்டா கிடைக்கும். தினசரி அளவு முடிந்ததும் வேகம் 40Kbps ஆகக் குறையும். எந்தவொரு நெட்வொர்க்கிற்கும் வரம்பற்ற Unlimited அழைப்புகள் மற்றும் நாளொன்றுக்கு 100 இலவச எஸ்எம்எஸ்கள். ஒரு நாளைக்குத் தோராயமாக ரூ.7.19 மட்டுமே செலவாகிறது.

பிஎஸ்என்எல்

ஒருவேளை இந்தத் திட்டத்தைத் தவறவிடும் வாடிக்கையாளர்கள், பிஎஸ்என்எல் நிறுவனத்தில் உள்ள மற்ற சில 365 நாட்கள் திட்டங்களைத் தேர்வு செய்யலாம்: ரூ.2,399 திட்டத்தில் தினசரி 2.5ஜிபி டேட்டா, அன்லிமிடெட் கால்கள் மற்றும் 100 எஸ்எம்எஸ்கள். இதன் தினசரி செலவு ரூ.6.57 மட்டுமே.

அதே போன்று ரூ.2,799 திட்டத்தில் அதிக டேட்டா தேவைப்படுபவர்களுக்காக நாளொன்றுக்கு 3ஜிபி டேட்டா வழங்குகிறது. இதர நன்மைகள் ஒரு வருடத்திற்குத் தொடரும்.

இந்தியா முழுவதும் 4ஜி சேவை!? மீண்டெழுகிறது பிஎஸ்என்எல்!

பிஎஸ்என்எல் அதிகாரப்பூர்வ இணையதளம், 'செல்ப் கேர்'  ஆப் அல்லது அருகில் உள்ள ரீசார்ஜ் கடைகள் மூலம் இந்தச் சலுகையைப் பெற்றுக் கொள்ளலாம். நாளைக்குப் பிறகு இந்தச் சிறப்புத் திட்டம் கிடைக்காது என்பதால், விருப்பமுள்ள வாடிக்கையாளர்கள் இன்றே ரீசார்ஜ் செய்துகொள்வது நல்லது.