₹15 லட்சம் லஞ்சம் வாங்கிய அமலாக்கத்துறை அதிகாரிகள்.. கையும் களவுமாக கைது செய்த போலீசார்..!!

 
ராஜஸ்தான் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது

ரூ.15 லட்சம் லஞ்சம் வாங்கிய அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் சிட் பண்டு மோசடி வழக்கில் கைது செய்யாமல் இருக்கவும், சொத்துகளை முடக்காமல் இருக்கவும் ரூ.15 லட்சம் லஞ்சம் வாங்கிய போது, அமலாக்கத்துறை அதிகாரிகள் 2 பேரை ராஜஸ்தானில் லஞ்ச ஒழிப்பு போலீசார், கையும் களவுமாக கைது செய்தனர்.இது தொடர்பாக ராஜஸ்தான் லஞ்ச ஒழிப்பு போலீசார் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: சிட் பண்டு வழக்கில் ரூ.15 லட்சம் லஞ்சம் வாங்கிய அமலாக்கத்துறை அதிகாரிகள் 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். 


அவர்களுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. மணிப்பூரில் பணியாற்றும் நாவல் கிஷோர் மீனா மற்றும் ராஜஸ்தானின் முன்டவாரில் உள்ள அமலாக்கத்துறை இளநிலை உதவியாளராக பணியாற்றும் பாபுலால் மீனா ஆகியோர், லஞ்சப்பணம் ரூ.15 லட்சத்தை வாங்கும் போது கையும் களவுமாக பிடிபட்டனர்.ராஜஸ்தான் லஞ்ச ஒழிப்புத்துறை ஏடிஜிபி கூறுகையில், சிட் பண்டு வழக்கில் கைதாகமல் இருக்கவும், சொத்துகளை முடக்காமல் இருக்கவும் ரூ.17 லட்சம் லஞ்சம் வேண்டும் என அமலாக்கத்துறை அதிகாரிகள் மிரட்டுவதாக, எங்களிடம் ஒருவர் புகார் அளித்தார்.

Two Enforcement Directorate officials held by Rajasthan cops, caught taking  bribe

அதை விசாரித்ததில் உண்மை இருப்பதை அறிந்தோம். தொடர்ந்து லஞ்சப்பணம் ரூ.15 லட்சத்தை வாங்கும் போது இருவரையும் கைது செய்தோம். இவ்வாறு அவர் கூறினார்.அமலாக்கத்துறை விளக்கம்லஞ்சம் வாங்கிய போது அதிகாரிகள் கைது செய்யப்பட்டது குறித்து விசாரணை நடந்து வருவதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

From around the web