நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை விபத்தில் பலி: துக்கம் தாளாமல் இளம்பெண் தற்கொலை!

 
இளம்பெண் தற்கொலை இளம்பெண் தற்கொலை

கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல்லா (23) என்பவருக்கும், ஊட்டி அருகே உள்ள மணி என்பவருக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. விரைவில் இருவருக்கும் திருமணம் நடைபெற இருந்த நிலையில், மணமக்கள் வீட்டார் அதற்கான ஏற்பாடுகளில் மும்முரமாக ஈடுபட்டு வந்தனர். புதிய வாழ்க்கையைத் தொடங்கக் காத்திருந்த இவர்களது வாழ்வில் எதிர்பாராத விதமாக விதி விளையாடியது.

gக்

திருமணத்திற்கு ஒரு மாதமே இருந்த நிலையில், மாப்பிள்ளை மணி இருசக்கர வாகன விபத்தில் சிக்கிப் படுகாயமடைந்தார். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த போதிலும், அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். தான் மணக்க இருந்தவர் இறந்துவிட்ட செய்தியைக் கேட்ட பிரபல்லா, கடும் மனவேதனையில் யாரிடமும் பேசாமல் சோகமாக இருந்து வந்துள்ளார்.

மாணவி இளம்பெண் சடலமாக சடலம் தற்கொலை கொலை

இந்நிலையில், குடும்பத்தினர் ஒரு திருமண நிகழ்ச்சிக்காக வெளியே சென்றிருந்த நேரத்தில், வீட்டில் தனியாக இருந்த பிரபல்லா தூக்குப்போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். திருமணம் நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை இறந்த துக்கத்தில் இளம்பெண்ணும் தனது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், பிரபல்லாவின் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.