அதிர்ச்சி வீடியோ... ரெண்டு நாளில் நிச்சயதார்த்தம்... கார் மோதி மாப்பிள்ளை பலியான சோகம்!

 
விபத்து விபத்து

தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம், மத்துலபள்ளி கிராமத்தைச் சேர்ந்த பிரசாத் என்ற இளைஞர், நேற்று (மார்ச் 31) இரவு நடைபெற்ற சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

நேற்று இரவு பிரசாத் தனது கிராமத்தின் அருகே உள்ள தனகாஹி சாலையைக் கடக்க முயன்றுள்ளார். அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த அடையாளம் தெரியாத கார் ஒன்று, எதிர்பாராத விதமாக பிரசாத் மீது பயங்கரமாக மோதியது. இதில் மோதிய வேகத்தில் தூக்கி வீசப்பட்ட பிரசாத், பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே துடிதுடிக்க உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய கார் நிறுத்தப்படாமல் அதிவேகத்தில் அங்கிருந்து தப்பியோடிவிட்டது.


உயிரிழந்த பிரசாத்திற்கு நாளை ஏப்ரல் 2ம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. திருமணக் கனவுகளுடன் அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்த இளைஞர், விபத்தில் சிக்கி உயிரிழந்தது அவரது உறவினர்கள் மற்றும் கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நிச்சயதார்த்தக் கொண்டாட்டத்திற்குத் தயாராகிக் கொண்டிருந்த அந்த வீடு, தற்போது மரண ஓலத்தால் சூழப்பட்டுள்ளது.

கொலை தற்கொலை வெட்டி மரணம் விபத்து

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பிரசாத்தின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், விபத்தை ஏற்படுத்திவிட்டுத் தப்பியோடிய கார் மற்றும் அதன் ஓட்டுநரைப் பிடிக்க அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுத் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.