பயங்கரம்.... மனைவி, மகனை சுட்டு கொலை செய்து இன்ஞினியர் தற்கொலை!!

 
பிரதீபா

கர்நாடக மாநிலம், தாவணகெரேயில் உள்ள ஹலேகல்லு கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர்  யோகேஷ்.இவருக்கு வயது , 37. இவருடைய  மனைவி பிரதிபா. மகன் யஷ்.மூவரும் அமெரிக்காவில் பால்டிமோரில் வசித்து வந்தனர்.  யோகேஷ் அமெரிக்காவில் இன் ஜினியராக பணிபுரிந்து வருகிறார்.  ஆகஸ்ட் 15ம் தேதி முதல் யோகேஷ் வீட்டில் இருந்து யாரும் வெளியில் வரவில்லை. இதனையடுத்து ஆகஸ்ட் 18ம் தேதி பக்கத்து வீட்டுக்காரரான பால்டிமோர் காவல்துறைக்கு தகவல் அளித்தார்.

துப்பாக்கி ரத்தம் க்ரைம் தற்கொலை கொலை

அவர்கள் வந்து பார்த்த போது மூவரும் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்துள்ளனர்.  இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் யோகேஷ் மனைவி, மகனை சுட்டு கொலை செய்து விட்டு தானும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து மாகாண காவல் துறையின் செய்தித் தொடா்பாளா் ஆன்டனி ஷெல்டன் கூறியதாவது, உயிரிழந்தவா்களின் உடலில் துப்பாக்கிக் குண்டு காயங்கள் உள்ளன. யோகஷ், முதலில் தனது மனைவியையும் மகனையும் துப்பாக்கியால் சுட்ட பிறகு, தற்கொலை செய்துகொண்டாா் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவத்தால் அருகில் மக்களின் உயிருக்கு எந்தவொரு அச்சுறுத்தலும் இல்லை என்றார்.

அமெரிக்க போலீஸ்

கா்நாடகத்தின் தாவண்கரே மாவட்டத்தில் உள்ள ஹல்லேகல்லு கிராமத்தைச் சேர்ந்த யோகேஷ், கடந்த 9 ஆண்டுகளாக அமெரிக்காவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இச்சம்பவம் குறித்து அமெரிக்காவில் உள்ள யோகேஷின் சகோதரருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர்.சம்பவம் நடைபெற்று மூன்று நாள்களாகிவிட்ட நிலையில், உயிரிழந்த மூவரின் உடல்களை இந்தியாவுக்கு அனுப்பி வைக்க ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என யோகேஷின் தாயார் ஷோபா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மக்களை துப்பாக்கி சூட்டுக்கு பறிகொடுத்து வரும் வல்லரசு நாடான அமெரிக்கா, துப்பாக்கி கலாச்சாரத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறது. அந்த அளவுக்கு அமெரிக்காவில் துப்பாக்கி பயன்பாடு, ஒரு மிக பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. அமெரிக்காவில் ஒரு நாளைக்கு சராசரியாக 53 பேர் துப்பாக்கிச்சூட்டில் பலியாவதாக அதிர்ச்சி தரும் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

From around the web