நாளை என்ஜினியரிங் சேர்க்கை.. நாளை 3ம் கட்ட கவுன்சலிங் தொடக்கம்!

 
அண்ணா பல்கலைக் கழகம்

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் 2026-2027 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக் கலந்தாய்வு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதுவரை இரண்டு கட்டக் கலந்தாய்வுகள் வெற்றிகரமாக நிறைவடைந்து, மொத்தம் 89,487 மாணவர்களுக்கு இட ஒதுக்கீட்டு ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.

அண்ணா பல்கலை கழகம்

நாளை ஆகஸ்ட் 17ம் தேதி  தொடங்கும் மூன்றாம் கட்டக் கலந்தாய்வில், தரவரிசைப் பட்டியலில் 1,31,094 முதல் 2,33,812 வரை இடம் பெற்றுள்ள மாணவர்கள் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளனர்.

பொதுப்பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்குப் பொறியியல் சேர்க்கைக்கான கடைசி வாய்ப்பு இந்த மூன்றாம் கட்டக் கலந்தாய்வுதான் என்பதால், தகுதிபெற்ற மாணவர்கள் தவறவிடாமல் பங்கேற்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.