"இல்லற சுகத்தை அனுபவிச்சுட்டு ஏமாத்திட்டாரு...” பிக்பாஸ் வின்னர் முத்துக்குமரன் மீது இன்ஸ்டாகிராம் பிரபலம் புகார்.. தற்கொலைக்கு முயன்ற நிலையில் மருத்துவமனையில் அனுமதி!

 
பிக்பாஸ் முத்துக்குமரன்

விஜய் தொலைக்காட்சியின் ‘தமிழ் பேச்சு எங்கள் மூச்சு’ மூலம் கவனம் பெற்று, ‘பிக்பாஸ் தமிழ்’ சீசன் 8 நிகழ்ச்சியில் டைட்டில் வென்ற முத்துக்குமரன் மீது, இன்ஸ்டாகிராம் பிரபலம் வகிதா பேகம் என்பவர் பாலியல் குற்றச்சாட்டு சுமத்திவிட்டுத் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்ஸ்டாகிராமில் பிரபலமான வகிதா பேகம் வெளியிட்டுள்ள வீடியோவில், தான் ஏற்கனவே திருமணமாகி 5 வயதில் ஒரு மகளுடன் இருப்பதாகவும், காதல் தோல்வியில் மனமுடைந்து இருந்தபோது கத்திபாராவில் முத்துக்குமரனை எதேச்சையாகச் சந்தித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் முத்துக்குமரன் வகிதா பேஹம்

தன்னைத் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி முத்துக்குமரன் தம்மோடு நெருக்கமாகப் பழகியதாகவும், ஆனால் பின்னர் திருமணம் பற்றிக் கேட்டபோது அவர் அதனைத் தவிர்க்கத் தொடங்கியதோடு, தனக்குத் திருமணத்தில் விருப்பமில்லை எனக் கூறியதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

சமூக வலைதளத்தில் இது குறித்துப் பேசிக்கொண்டிருக்கும் போதே ஆவேசமடைந்த வகிதா, அதிகப்படியான மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக அவரது நண்பர்களால் மீட்கப்பட்ட அவர், தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், முத்துக்குமரனுடன் தான் நெருக்கமாக இருக்கும் வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.

போலீசார் காவல் ஜீப் விசாரணை கொலை கைது பாலியல் பலாத்காரம் நீட்டிப்பு தப்பியோட்டம் கைதி

இந்த விவகாரம் குறித்துப் பதிலளித்துள்ள முத்துக்குமரன், "நானும் வகிதாவும் நல்ல நண்பர்கள் மட்டுமே. அவர் ஏன் இப்படிச் செய்தார் என்று எனக்குத் தெரியவில்லை. அவர் ஏற்கனவே சில மன உளைச்சலில் (Distortion) இருந்தார், இது குறித்து நான் அவரிடம் விளக்கம் கேட்டிருக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

பொதுவெளியில் முற்போக்காகவும் அறிவுபூர்வமாகவும் பேசி வந்த முத்துக்குமரன் மீது எழுந்துள்ள இந்தக் குற்றச்சாட்டு மற்றும் பெண் தற்கொலைக்கு முயன்ற விவகாரம் இணையத்தில் வைரலாகி வருவதுடன், அவருக்கு எதிராகப் பலரும் தங்களது கண்டனங்களையும்