"போதும் உங்க அலங்கோல ஆட்சி.. தயவு செய்து வீட்டுக்குக் கிளம்புங்க!" - அண்ணாமலை ஆவேசம்!

 
அண்ணாமலை அண்ணாமலை

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாகவும், பெண் குழந்தைகளுக்குப் பாதுகாப்பு இல்லை என்றும் குற்றம் சாட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு உடனடியாகப் பதவி விலக வேண்டும் என அண்ணாமலை ஆவேசமாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சமீபத்தில் 14 வயது சிறுமி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தைக் குறிப்பிட்டு அண்ணாமலை தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு என்பது பெயரளவுக்குக் கூட இல்லை என்பதற்கு இந்தச் சிறுமிக்கு நடந்த கொடுமையே சாட்சி. குற்றவாளிகளுக்குக் காவல்துறை மீதோ, அரசு மீதோ துளியும் பயமில்லை என்பது உறுதியாகியுள்ளது.

அண்ணாமலை

பெண்கள் மற்றும் சிறுமிகள் பாதுகாப்பாக வீட்டிற்குத் திரும்ப முடியாத நிலையை திமுக அரசு உருவாக்கியுள்ளது. இது தமிழகத்திற்கே நேர்ந்த மிகப்பெரிய அவமானம். திமுகவினர் நடத்தும் சாராய ஆலைகளின் லாபத்திற்காக, நமது தாய்மார்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை இந்த அரசு முழுமையாகப் புறக்கணித்துவிட்டது.

தமிழகம் நூறு ஆண்டுகள் பின்னோக்கிப் போய்விட்ட நிலையில், இதைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாமல் முதல்வர் விளம்பரங்களில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்.

அண்ணாமலை

"சட்டம் ஒழுங்கைக் கையாளத் என்றால், தயவு செய்து வீட்டுக்குக் கிளம்புங்கள் முதல்வர் அவர்களே. போதும் உங்கள் ஐந்து ஆண்டு கால அலங்கோல ஆட்சி" எனத் தனது அறிக்கையில் அண்ணாமலை மிகவும் ஆவேசமாகக் குறிப்பிட்டுள்ளார்.