சுற்றுச் சூழல் பாதுகாப்பு முகாம் | ஆர்வமுடன் மரக்கன்று நட்ட விழிப்புணர்வு ஏற்படுத்திய கல்லூரி மாணவிகள்!

 
தூத்துக்குடி மரியன்னை கல்லூரி என்சிசி

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தூய மரியன்னை கல்லூரியில் தேசிய மாணவர் படை சார்பாக 'சுற்றுச் சூழல் பாதுகாப்போம்' என்ற தலைப்பில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் அருட்சகோதரி ஜெஸி பெர்னான்டோ சுற்றுச் சூழலை பாதுகாப்பதில் தனி மனிதரின் பங்கு பற்றி சிறப்பாக எடுத்துரைத்தார். கல்லூரி முதல்வர் அருட்சகோதரி ஜெஸி பெர்னான்டோ மற்றும் துணை முதல்வர் அருட்சகோதரி எழிலரசி 50  மரக்கன்றுகள் நடும் நிகழ்வினை தொடங்கி வைத்தார்கள். தூத்துக்குடி மாநகராட்சி தூய்மை  அலுவலர் இராஜேந்திரன் தலைமையில் சுற்றுசூழல் பாத்துகாப்போம் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. 

தூத்துக்குடி

தேசிய மாணவர் படை மாணவிகள் கல்லூரி சாலையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நெகிழி இல்லா நகரம் குறித்து துண்டு பிரசுரங்களை வழங்கி பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்நிகழ்வினை தேசிய மாணவர் படை அலுவலர், பேராசிரியர் லெப்ட்னெண்ட் மேரி பிரியா ஒருங்கிணைத்து வழிநடத்தினார். மேலும் பொதுமக்களுக்கு மீண்டும் மஞ்சப்பை என்ற நோக்கத்தின் அடிப்படையில் 100 பைகளும், 30 சணல் பைகளும் மாணவிகளால் வழங்கப்பட்டன.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!

From around the web