அச்சச்சோ.... ஆய்வு செய்த போது வெடித்து சிதறிய பட்டாசுகள்!! அலறி துடித்த அரசு அதிகாரிகள்!!

 
பட்டாசுகள்

கிருஷ்ணகிரி மாவட்டம் பழையபேட்டையில் செயல்பட்டு வந்த தனியாருக்கு சொந்தமான பட்டாசு குடோனில்  ஜூலை 29 ம் தேதி திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் பட்டாசு குடோன் உரிமையாளர் ரவி உள்பட 9 பேர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் 7 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் உள்ள பட்டாசு கடைகள், குடோன்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பட்டாசுகள்
அந்த வகையில், நிலவரித் திட்ட சிறப்பு டி.ஆர்.ஓ. பாலாஜி தலைமையில் ஓசூர் அருகே உள்ள ஜே.காரப்பள்ளி பகுதியில் உள்ள சபு புருஷோத்தமன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு குடோனில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கிருந்த ஒரு அறையை திறக்கும்படி ஆலையின் மேலாளர் சீமான் என்பவரிடம் அதிகாரிகள் கூறியுள்ளனர்.அப்போது அங்கிருந்த ஒரு அறையை திறக்கும்படி ஆலையின் மேலாளர் சீமான் என்பவரிடம் அதிகாரிகள் கூறியுள்ளனர். அதற்கு அவர், அந்த அறைக்கு சாவி இல்லை என தெரிவிக்கவே, அதிகாரிகள் அங்கிருந்த கடப்பாறையை கொண்டு அறையின் பூட்டை உடைத்து திறந்தனர். அப்போது, பல மாதங்களாக பூட்டிக் கிடந்த அறையில், காற்று அதிக அளவில் சென்றதும், உடனடியாக உள்ளிருந்த வெடி மருந்து தீப்பற்றி வெடித்து சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

போலீஸ்

இந்த விபத்தில், ஒசூர் நிலவரித் திட்ட சிறப்பு டிஆர்ஓ பாலாஜி, நிலவரித் திட்ட சிறப்பு தாசில்தார் முத்துப்பாண்டி, தேன்கனிக்கோட்டை தாசில்தார் சரவணகுமார் மற்றும் குடோன் மேனேஜர் சீமான் ஆகியோர் படுகாயமடைந்தனர். அனைவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர் சரயு மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரோஜ் குமார் தாக்கூர் ஆகியோர், ஒசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சென்று நலம் விசாரித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web