இபிஎஸ், வேலுமணியை புறக்கணிக்கவில்லை... செங்கோட்டையன் அதிருப்தி!
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை நிறைவேற்றியதற்காக அவருக்கு விவசாய சங்கங்கள் சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சி கோயம்புத்தூர் மாவட்டம் அன்னூர் அருகே கஞ்சப்பள்ளியில் நடைபெற்றது. பாராட்டு விழாவில் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கலந்து கொண்டனர். அந்நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. அவர் எதற்காக கலந்து கொள்ளவில்லை என்ற கேள்விகளும் எழும்ப தொடங்கியது.

இது குறித்து அவர் ஈரோட்டில் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்துள்ளார். அதில் ” நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கும் குழுவை சார்ந்தவர்கள் கடந்த 3 நாட்களுக்கு முன்பு என்னை சந்தித்தார்கள். அவர்கள் என்னை சந்தித்தபோது நான் வைத்த வேண்டுகோள் என்னவென்றால், எங்களை உருவாக்கிய புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சி தலைவர் அம்மா ஜெயலலிதா படங்கள் இல்லை.இது சம்பந்தமாக முன்னாலேயே நீங்கள் பேசியிருந்தால் அதனை உங்களுடைய கவனத்திற்கு எடுத்து சொல்லிருப்பேன். பல்வேறு இடங்களில் நிகழ்ச்சி தொடர்பான பேனர்கள் வைக்கும்போது தான் என்னுடைய கவனத்திற்கு இது வந்தது.

ஆகவே என்னை வளர்த்து ஆளாக்கிய தலைவருடைய படங்கள் இல்லை. அதே நேரத்தில் இந்த திட்டத்தை கொண்டு வருவதற்கு 2011 ல் அம்மா அவர்கள் 3கோடி 72 லட்சம் வழங்கினார்.ஆகவே இந்த பணிகளை தொடங்குவதற்கு அவர்கள் தான் அடித்தளமாக இருந்திருக்கிறார்கள். எனவே, அவர்களுடைய படங்கள் இல்லையென்று அவர்களிடம் சொன்னேன். நான் நிகழ்ச்சிக்கு செல்லவில்லை அவ்வளவு தானே தவிர அவர்களை புறக்கணிக்கவில்லை” எனவும் செங்கோட்டையன் விளக்கம் அளித்திருந்தார்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!
