இன்று அதிமுக நிர்வாகிகளுடன் ஈபிஎஸ் முக்கிய ஆலோசனை!

 
எடப்பாடி

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான 'புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகை' வளாகத்தில் இன்று காலை இபிஎஸ் தலையில் அதிமுக உயர்மட்டக் கூட்டம் தொடங்கியது: முதற்கட்டமாக இன்று காலை நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள், பகுதிச் செயலாளர்கள் மற்றும் வட்டக் கழகப் பிரதிநிதிகளுடன் எடப்பாடி பழனிசாமி நேரடி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

சமீபத்திய சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின் பின்னடைவுகள் குறித்த விரிவான ஆய்வுகள், பூத் கமிட்டிகளின் தற்போதைய செயல்பாடுகள் மற்றும் கட்சியின் ஆக்கப்பூர்வமான வளர்ச்சிப் பணிகள் குறித்து இந்தச் சந்திப்பில் மிகத் தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களைத் தொடர்ந்து, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகளையும் தனித்தனியாக நேரில் சந்தித்து ஆலோசிக்க ஈபிஎஸ் திட்டமிட்டுள்ளார்:

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசுப் பொறுப்பேற்றுள்ள சூழலில், ஆளுங்கட்சியின் மக்கள் அதிருப்தி விவகாரங்களை எப்படிக் கையில் எடுப்பது என்பது குறித்து வியூகங்கள் வகுக்கப்படவுள்ளன.

அம்பாசமுத்திரம் தொகுதியில் திமுக நேரடியாகக் களம் இறங்கி அனிதா ராதாகிருஷ்ணனுக்குப் பொறுப்பு வழங்கியுள்ள நிலையில், அங்கு அதிமுகவின் பலத்தை நிரூபிப்பதற்கான தேர்தல் களப்பணிகள் குறித்தும் இந்தத் தொடர் கூட்டங்களில் இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது.