ஓபிஎஸ்க்கு எதிராக இபிஎஸ் தொடர்ந்த வழக்கு வாபஸ்!

 
ஓபிஎஸ்க்கு எதிராக இபிஎஸ் தொடர்ந்த வழக்கு வாபஸ்! ஓபிஎஸ்க்கு எதிராக இபிஎஸ் தொடர்ந்த வழக்கு வாபஸ்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இரு தரப்பும் பரஸ்பரம் தங்களுக்குள் நிலுவையில் இருந்த அனைத்து சிவில் வழக்குகளையும் சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்து திரும்பப் பெற்றுள்ளனர்.

அதிமுகவின் பெயர், கொடி, சின்னம் மற்றும் லெட்டர் பேட் போன்றவற்றை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த தடை விதிக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை இபிஎஸ் தற்போது வாபஸ் பெற்றுள்ளார். இதேபோல், அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் உட்கட்சி விவகாரங்களுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தொடரப்பட்டிருந்த வழக்குகளும் திரும்பப் பெறப்பட்டுள்ளன.

ஓபிஎஸ்

இரு தரப்பினரும் தங்களின் மனுக்களை வாபஸ் பெற்றதை அடுத்து, இந்த வழக்குகளை முடித்து வைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஓ.பன்னீர்செல்வம் திராவிட முன்னேற்றக் கழகத்தில் (திமுக) அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ள நிலையில்தான், அதிமுக உட்கட்சி உரிமை தொடர்பான இந்த சட்டப் போராட்டங்கள் முழுமையாக முடிவுக்கு வந்துள்ளன.