விறுவிறுப்பாகும் ஈரோடு இடைத்தேர்தல்... வீடு வீடாக பூத் சிலிப் வழங்கும் பணி தொடக்கம்!

 
பூத் சிலிப்

 ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்  பிப்ரவரி 5ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக ஜனவரி 10 முதல்  17ம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது.ஜனவரி 18ம் தேதி நடைபெற்ற வேட்பு மனு பரிசீலனையில் 55 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டன.  அதிமுகவில் இருந்து சுயேச்சையாக போட்டியிட்ட செந்தில் முருகன் தனது மனுவை திரும்ப பெற்றார்.

பூத் சிலிப்

8 பேர் வேட்பு மனுக்களை திரும்ப பெற்ற நிலையில், ஒரு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில்  இடைத்தேர்தலில் 46 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இடைத்தேர்தலுக்கான தபால் வாக்குப்பதிவு ஜனவரி  23ம் தேதி தொடங்கியது.இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான பூத் சிலிப் வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

ஈரோடு

அங்கன்வாடி ஊழியர்கள் ஈரோடு கிழக்கு தொகுதியில் வீடு, வீடாக சென்று பூத் சிலிப் வழங்கி வருகின்றனர். இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 5ம் தேதி நடைபெற உள்ளது.  இடைத்தேர்தலை முன்னிட்டு ஈரோடு கிழக்கு தொகுதியில் தீவிர சோதனைகள் நடைபெற்று வருகின்றன.  

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web