ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் ... 246 தபால் வாக்குகள் பதிவு

 
தபால் ஓட்டு


தமிழகத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 5ம் தேதி நடைபெற உள்ள நிலையில் தபால் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதில்  வாக்குச் சாவடிக்கு சென்று வாக்களிக்க முடியாத 85 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, 256 பேர் வீடுகளில் இருந்து தபால் வாக்களிக்க 12 டி விண்ணப்பத்தை அளித்து இருந்தனர்.

தபால் வாக்குப்பதிவு


இவர்களின் வீடுகளுக்கு சென்று தபால் வாக்கு பதிவு செய்ய 4 குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன. இவர்கள் ஜனவரி 23 , 24, 25-ம் தேதிகளில் தபால் வாக்குகளை பதிவு செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக, தபால் வாக்குகள் பதிவு செய்யும் பணி இறுதிநாளான நேற்று மாலை நிறைவடைந்தது. இதில், வீட்டில் இருந்தவாறே தபால் வாக்கு செலுத்த ஒப்புதல் அளித்து இருந்த 256 பேரில், 85 வயதுக்கு மேற்பட்ட 6 நபர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும், ஒரு வாக்காளர் இடமாறுதல் ஆனதாலும், 3 வாக்காளர்கள் மரணமடைந்தனர்.  மொத்தம் 10 வாக்காளர்கள் வாக்களிக்கவில்லை. தபால் வாக்குப்பதிவு முடிவில், 85 வயதிற்கு மேற்பட்ட199 பேர், 47 மாற்றுத்திறனாளிகள் என 246 வாக்காளர்கள் வாக்கு செலுத்தியுள்ளனர்.

முதியோர் தபால் வாக்கு வோட்டு தேர்தல்
 ஈரோடு மாவட்டத்தில் உள்ள சட்டப்பேரவை தொகுதி வாரியாக  ஜனவரி 6- தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதன்படி, மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவை தொகுதிகளில், 19 லட்சத்து 77 ஆயிரத்து 419 வாக்காளர்கள் உள்ளனர். இதில், புதியதாக 35 ஆயிரத்து 855 பேர் வாக்காளர்களாக சேர்க்கப்பட்டனர். மாவட்ட அளவில் புதிய வாக்காளர்கள் மற்றும் அடையாள அட்டையில் திருத்தம் கோரி விண்ணப்பித்த 49295 வாக்காளர்களுக்கு புதிய அடையாள அட்டை வழங்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இதில் முதல்கட்டமாக 19 ஆயிரத்து 172 பேருக்கு புதிய அடையாள அட்டை தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் மட்டும் புதியதாக இணைந்த, புதிய வாக்காளர்கள் மற்றும் ஏற்கெனவே அடையாள அட்டை வைத்திருந்து, திருத்தம் மேற்கொண்டவர்கள் என 1,500 பேருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. மீதம் உள்ளவர்களுக்கு படிப்படியாக அடையாள அட்டை அனுப்பி வைக்கப்படும் என தேர்தல் அலுவலர்கள் தெரிவித்தனர்.
 

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web