விநாயகர் ஊர்வலத்தில் திடீர் மோதல்! ஈரோடு கருங்கல்பாளையத்தில் இளைஞர்கள் இடையே வாக்குவாதம்

 
erode

ஈரோடு கருங்கல்பாளையத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின்போது இருதரப்பு இளைஞர்களிடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.வாக்குவாதம் முற்றிய நிலையில், இருதரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதாகவும், இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட இந்த மோதலால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றமான சூழல் நிலவியதாக கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பான முழு விவரங்கள் மற்றும் போலீசார் மேற்கொண்ட நடவடிக்கை குறித்து தகவல்கள் வெளியாக வேண்டியுள்ளது.

சென்னை ராமாபுரத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின்போது ஏற்பட்ட மோதலில் MTC பேருந்து ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சமீபத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஈரோட்டிலும் விநாயகர் ஊர்வலத்தின்போது இளைஞர்கள் இடையே மோதல் ஏற்பட்டதாக வெளியாகியுள்ள தகவல் கவனத்தை பெற்றுள்ளது.சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும், மோதலுக்கான காரணம் குறித்து தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.