பரபரப்பு... தவெக நிர்வாகி தள்ளுவண்டி கடைக்காரர் மீது தாக்குதல் !

 
tvk tvk

காளியூரைச் சேர்ந்த 50 வயதான வள்ளியம்மாள் என்பவர் கோபி பகுதியில் தள்ளுவண்டி கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் பெரிய கொடிவேரி பேரூர் கழக தமிழக வெற்றிக் கழக செயலாளர் சசிகுமார் ஓட்டி வந்த கார், வள்ளியம்மாளின் தள்ளுவண்டி கடையின் மீது பலமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் அவரது தள்ளுவண்டி கடை முற்றிலும் உடைந்து சேதமடைந்தது.

இந்த விபத்து குறித்து வள்ளியம்மாள் கேள்வி எழுப்பியபோது, தவெக நிர்வாகி சசிகுமார் அவரிடம் தகராறில் ஈடுபட்டு தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட பெண்மணி காயங்களுடன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். எளிய வியாபாரியின் கடை உடைக்கப்பட்ட சம்பவமும், பெண் என்றும் பாராமல் அவர் மீது நடத்தப்பட்ட தாக்குதலும் அப்பகுதி மக்களிடம் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த புகாரின் பேரில் தவறு செய்த தவெக நிர்வாகி மீது எவ்வித சட்ட நடவடிக்கையும் எடுக்காமல், காவல்துறை அதிகாரிகள் வள்ளியம்மாளையே மிரட்டியதாக புதிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது. காவல்துறையினரின் இந்த பாரபட்சமான அணுகுமுறையைக் கண்டித்து பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட தள்ளுவண்டி கடைக்காரருக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என கோபி பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.