15 வயதுடன் சிறுவனுடன் எஸ்கேப்.. 22 வயது இளம்பெண்ணை போக்சோவில் கைது செய்த போலீசார்!
சென்னையில் 15 வயது சிறுவனுடன் காணாமல் போன 22 வயது இளம்பெண்ணை புதுச்சேரியில் இருந்து அழைத்து வந்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை எம்ஜிஆர் நகரை சேர்ந்த 15 வயது சிறுவன், 10ம் வகுப்பில் தோல்வியடைந்து, அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரின் வீட்டில் டியூஷன் படித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 16ம் தேதி வெளியே சென்ற சிறுவன் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து சிறுவனின் பெற்றோர் எம்ஜிஆர் நகர் போலீசில் புகார் அளித்தனர். விசாரணையில், அந்த சிறுவன் பாண்டிச்சேரிக்கு டியூஷன் கற்றுக்கொடுத்த பெண்ணின் தங்கையான 22 வயது இளம்பெண் மற்றும் ராகுல் (வயது 19) என்ற வாலிபருடன் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து புதுச்சேரி சென்ற போலீசார் மூவரையும் அழைத்து வந்தனர். போக்சோ சட்டத்தின் கீழ் சிறுமி மற்றும் ராகுல் இருவரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில், சிறுவனும் இளம்பெண்ணும் காதலித்து வந்ததும், அவர்களுக்கு ராகுல் உதவி செய்ததும் தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!