இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் இடி தாக்கி ஒருவர் பலி, 2 பேர் படுகாயம்!
Oct 23, 2026, 11:10 IST
தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகே உள்ள தாப்பாத்தி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் புதிய வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இங்கு கொத்தனார் வேலை செய்து வந்த புதூர் அருந்ததியர் காலனியைச் சேர்ந்த முனியசாமி (24) உள்ளிட்ட தொழிலாளர்கள், வேலை முடிந்ததும் முகாமில் உள்ள ஓலைக்குடிசையில் தூங்கினர்
.
இரவு 10 மணியளவில் பலத்த மழை பெய்தபோது, குடிசையின் மீது இடி தாக்கியது. இதில் தூங்கிக் கொண்டிருந்த முனியசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அவருடன் இருந்த மாரிமுத்து (34), சுனில் (45) ஆகிய இருவரும் காயமடைந்தனர். அவர்கள் தற்போது இயல்பான நிலையில் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
